பூண்டு மிளகாய் பொடி
தேவையான பொருள்கள் ;
மிளகாய் -15
பூண்டு -20 பல்
கல் உப்பு -1 டீஸ்பூன்
செய்முறை ;
1/2 டீஸ்பூன் எண்ணெய் போட்டு மிளகாய பொன்னிறமா கல் உப்பு போட்டு வருத்துக்கணும் [மிளகாய் நெடியை தவிர்க்கலாம்]
மிக்சி கப்-இல் மிளகாய்,உப்பு சேர்த்து அரைக்கவேண்டும், பிறகு பூண்டு சேர்த்து அரைக்கவேண்டு [பூண்டு உரிக்க வேண்டிய அவசியம் இல்லை].
இந்த பொடி 1 மாசத்துக்கு இருக்கும், கெட்டு போகாது .இதை ஒரு டப்பாவில் போட்டு வாசனை போகாமல் மூடி வைக்கவும்.
இந்த பொடியில் நல்லெண்ணெய் ஊற்றி இட்லி ,தோசை ,சப்பாத்தி அனைத்திற்க்கும்.தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் ..

No comments:
Post a Comment