சீரக ரசம் [Cumin Rasam]
தேவையான பொருள்கள் ;
ஊற வைக்க
[சீரகம்- 4டீஸ்பூன் துவரம் பருப்பு-3 டீஸ்பூன் வர கொத்தமல்லி [தனியா ]- 2டீஸ்பூன் மிளகாய் -4தக்காளி -1பெருங்காய கட்டி- சிறிய துண்டு ]இவை அனைத்தையும் அரை மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்
தாளிக்க ;மிளகாய்-2கடுகு ,உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன் பெருங்காயம் கொஞ்சம் தக்காளி -2 [பெரிய துண்டுகளாக நறுக்கவும்]புளி-1எழுமிச்சம் பழம் அளவு உப்பு-தேவையான அளவு ,மஞ்சள்த்தூள் அரிசி கழுவிய நீர் - 1கப் பச்ச கொத்தமல்லி ,கருவேப்பிலை
செய் முறை ;முதலில் புளி கரைத்து அதில் ,ஊற விட்டு அரைத்த விழுது ,மஞ்சள்த்தூள் ,உப்பு சேர்க்கவும் .பிறகு ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் ,கடுகு ,உளுத்தம்பருப்பு ,பெருங்காயம் கொஞ்சம்,நறுக்கிய தக்காளி துண்டுகள் போட்டு வதக்கி புளி கரைசலை ஊற்றி ஒரு கொத்தி வந்தவுடன் அரிசி கழுவிய நீர் விட்டு கொத்தமல்லி ,கருவேப்பில்லை போட்டு இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும் ,சுவையான சீரக ரசம் தயார் .இந்த சீரக ரசம் வித்தியசமாய் இருக்கும் ,சுவையாகவும் இருக்கும.
No comments:
Post a Comment