Thursday, 24 March 2011

பரோட்டா

ஹோட்டலில்  செய்வது போல வீட்டிலேயே சுவையான பரோட்டா







 தேவையானபொருள்கள் ;

மைதா-250 கிராம்
சமையல் எண்ணெய் -தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் -தேவையான அளவு
செய்முறை ;
மைதா மாவை நன்றாக சலித்துவிட்டு உப்பு ,ஒரு ஸ்பூன் எண்ணெய்  சேர்த்து பிசிறிவிட்டு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும் .
பிறகு ஒரு ஈரமான துணியிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ நன்றாக மூ
டி அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் வைக்கலாம்

.பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக   எடுத்து வைத்து க்கொள்ளவும் .


 பிறகு ஒவ்வொரு சப்பாத்தியாக இட்டு ஒன்றன் மேல் ஒன்றாக  எண்ணெய்  தடவி  அடுக்க வேண்டும் .
தொடு மாவிற்கு அரிசி மாவுதான்  பயன் படுத்த வேண்டும் .இது போல் ஐந்து சப்பாத்திகள்அடுக்க வேண்டும் .பிறகு அடுக்கிய சப்பாத்திகளை சுருட்டி ரோல் செய்து துண்டுகளாக நறுக்கவும்..










நறுக்கிய  துண்டுகளை  எடுத்து திருப்பி பார்த்தால் மடிப்புகள்  தெரியும் .அதை அப்படியே அழுத்தி எண்ணெய் தடவி வைக்கவும் .

 பிறகு அழுத்திய உருண்டைகளை கையால் தட்டி பெரியதாக்கவும் [குழவியாலும் தேய்க்கலாம்]
 பிறகு தோசைக்கல்லில் போட்டு நன்றாக திருப்பி போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு வேக விடவும்.

 எளிதான சுவையான பரோட்டா தயார்.தொட்டு கொள்ள காய்கறி குருமாவைத்து கொள்ளலாம்

Sunday, 13 March 2011

சீரக ரசம் [Cumin Rasam]



 



தேவையான பொருள்கள் ;
ஊற வைக்க 
 [சீரகம்-  4டீஸ்பூன் துவரம் பருப்பு-3 டீஸ்பூன் வர கொத்தமல்லி [தனியா ]- 2டீஸ்பூன் மிளகாய் -4தக்காளி -1பெருங்காய கட்டி- சிறிய துண்டு ]இவை அனைத்தையும்  அரை மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்
தாளிக்க ;மிளகாய்-2கடுகு ,உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன் பெருங்காயம் கொஞ்சம் தக்காளி -2  [பெரிய துண்டுகளாக நறுக்கவும்]புளி-1எழுமிச்சம் பழம் அளவு உப்பு-தேவையான அளவு ,மஞ்சள்த்தூள் அரிசி கழுவிய நீர் - 1கப் பச்ச கொத்தமல்லி ,கருவேப்பிலை 
செய் முறை ;முதலில் புளி கரைத்து  அதில் ,ஊற விட்டு அரைத்த விழுது ,மஞ்சள்த்தூள் ,உப்பு சேர்க்கவும் .பிறகு ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் ,கடுகு ,உளுத்தம்பருப்பு ,பெருங்காயம் கொஞ்சம்,நறுக்கிய தக்காளி துண்டுகள்  போட்டு வதக்கி புளி கரைசலை ஊற்றி ஒரு கொத்தி வந்தவுடன் அரிசி கழுவிய நீர் விட்டு கொத்தமல்லி ,கருவேப்பில்லை போட்டு இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும் ,சுவையான சீரக ரசம் தயார் .இந்த சீரக ரசம் வித்தியசமாய் இருக்கும் ,சுவையாகவும் இருக்கும.




Image result for border designs


Saturday, 12 March 2011

மக்ரோனி சாதம்;[Macroni Rice]

                                                    மக்ரோனி சாதம் ;[Macroni Rice]
                           

    தேவையான பொருள்கள் ;                                                          

    சாதம் -2கப்
   கேரட் -1/4கப்    பொடியாக நறுக்கியது
     உருளை கிழங்கு -  1/4கப்    பொடியாக நறுக்கியது
     வேக வைத்த பட்டாணி -1/4 கப்
     வேக வைத்தமக்ரோனி -1/4கப்
     இஞ்சி ,பூண்டு விழுது -1ஸ்பூன்
      புதினா,பச்சை கொத்தமல்லி


                                                         நெய் -2ஸ்பூன்
    எழுமிச்சைபழம் =1 மூடி
       சமையல் எண்ணெய் -2ஸ்பூ
       மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
      உப்பு -தேவையான அளவு
       சாதம் -2கப்
        கேரட் -1/4கப்    பொடியாக நறுக்கியது
         உருளை கிழங்கு -  1/4கப்    பொடியாக நறுக்கியது
          வேக வைத்த பட்டாணி -1/4 கப்
           வேக வைத்தமக்ரோனி -1/4கப்


செய் முறை;
ஒரு   கடாயில்   எண்ணெய் ஊற்றி  அடுப்பை குறைவான தீயில் எரிய விடவும் , பிறகு மிளகாய்த்தூள் போட்டு கொஞ்சம்  கலர் மாறியதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட்,உருளை கிழங்கு இரண்டையும் போட்டு துளி உப்பு சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ,வேகவைத்த பட்டாணி ,மக்ரோனி ,சாதம் இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும் .பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.பிறகு இஞ்சி ,பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.பிறகு அடுப்பை அனைத்து விட்டு நெய்,எழ்மிச்சை சாறு சேர்க்கவும் .கடைசியாக புதினா,கொத்தமல்லி சேர்க்கவும்.மக்ரோனி சாதம் தயார .இந்த சாதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் .இந்த சாதத்திற்கு சிப்ஸ் தொட்டு கொள்ள பொருத்தமாக இருக்கும்.

பின் குறிப்பு ; இதில் இஞ்சி,பூண்டு விழுது கடைசியில்தான் சேர்க்கணும்
--



Friday, 11 March 2011

இட்லி பொடி[IDLI PODI]

                                                                       இட்லி பொடி



 


 அளவு கப் 





தேவையான பொருள்கள் ;
கடலை பருப்பு -1கப் 
 


 கருப்பு உளுத்தம் பருப்பு [அ] வெள்ளை உளுத்தம் பருப்பு -21/2கப்  
 










புழுங்கல் அரிசி -1கப் 











வர கொத்தமல்லி -1/4கப் 
 










கருவேப்பிலை -ஒரு கைப்பிடி அளவு 











கட்டி பெருங்காயம் -1/4கட்டி










  வர மிளகாய் -200கிராம்
 


   






  உப்பு -தேவையான அளவு 
                                                         

  செய்முறை;
                                                     வெறும் கடாயில் அரிசியை வறுத்துக்கொள்ளவும் ,மற்ற பொருள்களை எண்ணெய் கொஞ்சமாக விட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து கொளவும் ,மிளகாயை முதலில் அரைத்து விட்டு பிறகு அனைத்தையும் சேர்த்து அரைக்கவும் .சுவையான இட்லி பொடி தயார்


செய்முறை;
வெறும் கடாயில் அரிசியை வறுத்துக்கொள்ளவும் ,மற்ற பொருள்களை எண்ணெய் கொஞ்சமாக விட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து கொளவும் ,மிளகாயை முதலில் அரைத்து விட்டு பிறகு அனைத்தையும் சேர்த்து அரைக்கவும் .சுவையான இட்லி பொடி தயார்

இரண்டாவது விதம் ;
உளுத்தம் பருப்பு -1/4 கிலோ
பெருங்காய கட்டி -ஒரு சின்ன துண்டு
மிளகாய்- 100   கிராம்
உப்பு -தேவையான அளவு

மூன்றாவது விதம்
;

 கடலை பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு -1 1/2 கப்
மிளகாய்- 100கிராம்
உப்பு -தேவையான அளவு
பெருங்காய கட்டி -ஒரு சின்ன துண்டு


Image result for end designs





Thursday, 10 March 2011

பூண்டு மிளகாய் பொடி[garlic chilli podi]

                                               பூண்டு மிளகாய் பொடி    



தேவையான பொருள்கள் ;

மிளகாய் -15 

பூண்டு    -20 பல்

  கல் உப்பு -1 டீஸ்பூன்

செய்முறை ;

1/2 டீஸ்பூன் எண்ணெய் போட்டு  மிளகாய பொன்னிறமா கல்  உப்பு போட்டு வருத்துக்கணும் [மிளகாய்  நெடியை தவிர்க்கலாம்]
மிக்சி கப்-இல்  மிளகாய்,உப்பு சேர்த்து   அரைக்கவேண்டும், பிறகு  பூண்டு சேர்த்து அரைக்கவேண்டு [பூண்டு  உரிக்க  வேண்டிய  அவசியம்   இல்லை].
இந்த பொடி 1 மாசத்துக்கு   இருக்கும், கெட்டு  போகாது .இதை ஒரு  டப்பாவில் போட்டு வாசனை   போகாமல்  மூடி  வைக்கவும்.
இந்த  பொடியில்  நல்லெண்ணெய் ஊற்றி  இட்லி ,தோசை ,சப்பாத்தி அனைத்திற்க்கும்.தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் ..


                                                





                                                           









எலுமிச்ச பழ மிளகாய் பொடி

எலுமிச்ச பழ மிளகாய் பொடி[
                                                
                                       
                                    
தேவையான பொருள்கள்;
  எலுமிச்சம்பழம் -2  மிளகாய்த்தூள் [அல்லது] மிளகாயை வறுத்து அரைத்த பொடி-  5 டீஸ்பூன்[அல்லது] கடையில் வாங்கிய மிளகாய்த்தூள் 

  பெருங்காய பொடி- 1 டீஸ்பூன்
  உப்பு -தேவையான அளவு

 தாளிக்க ;
 நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
 கடுகு,  உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
 கருவேப்பிலை
செய் முறை; 
ஒரு  கிண்ணத்தில் மிளகாய்த்தூள், எழுமிச்சசாறு, உப்பு, பெருங்காய பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.   பிறகு  நல்லெண்ணெய்  விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை  சேர்த்து தாளித்து கொட்டி நன்றாக கலக்கவும். சுவையான எலுமிச்ச பழ மிளகாய் பொடி தயார் .
இந்த மிளகாய் பொடி இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம்  இவை அனைத்திற்கும் தொட்டு கொள்ள   நன்றாக இருக்கும்









சப்பாத்தி நூடுல்ஸ்



                                                        சப்பாத்தி நூடுல்ஸ்  
தேவையான பொருள்கள் ;
சப்பாத்தி - 6
உருளைக்கிழங்கு -1
கேரட் -1
 குடைமிளகாய் -1 வெங்காயம் -2
தக்காளி -2
பச்சைமிளகாய் -1 
கொத்தமல்லி            
இஞ்சி -சிறியதுண்டு    
பூண்டு-4,பல்
சோம்பு ,சீரகம் சிறிதளவு
 சமையல் எண்ணெய் தேவையான அளவ
சோயா சாஸ் ,தக்காளி சாஸ் -சிறிதளவு 

செய்முறை
;குடைமிளகாய் ,வெங்காயம் ,தக்காளி ,கேரட் ,இஞ்சி ,பூண்டு ,பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் நீளவாக்கில் மெல்லியதாய் நறுக்கிக்கொள்ளவும் . கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம் தாளித்து வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும் ,பிறகு ஒவ்வொன்றாக ப்போட்டு நன்றாக வதக்கி க்கொள்ளவும் ,பிறகு மிளகாய்த்தூள் ,உப்புச்சேர்த்து நன்றாக வதக்கி க்கொள்ளவும் ,மூடி வைத்து  பத்து நிமிடம் கழித்து மெல்லியதாய் நறுக்கிய சப்பாத்தியை ச்சேர்த்து   கருவேப்பிலை .,கொத்தமல்லி போட்டு நன்றாக கிளறவும் ,ஐந்து நிமிடம் க்கழித்துசோயா சாஸ் ,தக்காளி சாஸ் -சிறிதளவு சேர்த்து இறக்கவும் ,சப்பாத்தி நூடுல்ஸ் தயார்



 


See full size image




கேசரி

                                                                    கேசரி
தேவையான பொருள்கள் ;  
ரவை -  1கப்
 சர்க்கரை - 2கப் 
தண்ணீர் - 2கப்
பால் - 2கப்
நெய் - 2கப்
முந்திரி - 10கிராம்
திராட்சை-5கிராம்
ஏலக்காய் -தேவையான அளவு
உப்பு - 1சிட்டிகை
 கேசரி பவுடர் -மஞ்சள் [அ]ஆரஞ்சு கலர்

செய்முறை ;

ஒரு கடாயில் நெய் ஊற்றி ரவையை வறுத்து எடுத்து வைத்து கொள்ள
வேண்டு .பிறகு, முந்திரி, திராட்சை ,ஏலக்காய் நெய் போட்டு வறுத்து கொள்ள வேண்டும்.பிறகு, கடாயில் பால் ,தண்ணீர்  இரண்டையும் கலந்து கொதி வந்தவுடன்கேசரி பவுடர்  ரவையை போட்டு கிளறி வேக வைக்க வேண்டும்.ரவைவெந்தவுடன்  சர்க்கரையை சேர்த்து கிளறி சேர்ந்து தளதள என்று பதம் வந்தவுடன் நெய் சேர்த்து கிளறி இறக்கவும் .முந்திரி ,திராட்சை ,ஏலக்காய் சேர்த்து மீதம் உள்ள நெய் சேர்த்து கிளறி பரிமாறவும் .மிகவும் சுவையாக இருக்கும்

Welcome To My Blog

என்னுடைய வலை பதிவுக்கு வந்தமைக்கு நன்றி .இங்கே எனது அனுபவ சமையல் செய்முறைகளை பதிவு செய்ய இருக்கிறேன் எனது பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள் .

மிக்க நன்றி 
லதா கணேசன்