Friday, 14 December 2018

தஞ்சாவூர் டிபன் சாம்பார் [TANJORE TIFFIN SAMBAR]

           தஞ்சாவூர் டிபன்   சாம்பார் 

தேவையான  பொருட்கள் ;
துவரம் பருப்பு --1கப் 
[TOOR DAL]
பாசி  பருப்பு [அ ]சிறு பருப்பு --2ஸ்பூன் 
[MOONG  DAL]
தக்காளி -6 பெரியது 
பச்சை மிளகாய் --10  
சின்ன வெங்காயம்--1கப் 
முருங்கைக்காய் -5துண்டுகள் 
கத்திரிக்காய் --1கப் நறுக்கியது 
உருளை கிழங்கு --1
மாங்காய் --1 துண்டு 
புளி --1கொட்டை அளவு 
கருவேப்பிலை -1கொத்து 
பச்சை கொத்தமல்லி
உப்பு --தேவையான அளவு 

செய்முறை 









Image result for pachai kothamalli


  ஒரு குக்கரில்  சிறிது எண்ணெய் விட்டு அதில் பொடியாக  நறுக்கிய  கத்திரிக்காய் ,உருளை கிழங்கு ,தக்காளி ',,,முருங்கைக்காய் துண்டுகள் ,துவரம் பருப்பு ,,பாசி பருப்பு ,புளி ,மாங்காய் துண்டு ,மஞ்சள் தூள் ,பெருங்காயம் எல்லாம் போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் அடுப்பை  நிறுத்தி விடவும் .பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வர மிளகாய் ,பெருங்காயம்,கடுகு உளுத்தம் பருப்பு ,போட்டு தாளித்த பிறகு சின்ன வெங்காயம்,கீறிய பச்சை மிளகாய் ,கருவேப்பிலை எல்லாம் போட்டு வதக்கவும்.பிறகு குக்கரில் இருக்கும் பருப்பை நன்றாக மசித்து கொள்ளவும் ,அதனோடு வதக்கிய வெங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து ,பிறகு உப்பு போட்டு குக்கரில் மூடி போட்டு 10  நிமிடம் கொத்திக்கவைக்கவும் ,குக்கரில் வெயிட் போடவேண்டாம் .நன்றாக கொதித்தவுடன் டிபன் சாம்பார் பொடியை சிறிது தண்ணீரில் கரைத்து சாம்பாரில் போட்டு ஒரு கொதி விட்டு இறக்கவும் ,கடைசியாக பச்சை கொத்தமல்லி சேர்க்கவும்.டிபன்  சாம்பார்   தயார் ,இந்த சாம்பார் இட்லி,தோசை ,பொங்கல் அனைத்துக்கும் தொட்டுக்கொள்ள   மிகவும் ருசியாகவும்,மணத்துடனும் இருக்கும் 

Image result for border designs


No comments:

Post a Comment