இட்லி உப்புமா
தேவையான பொருட்கள் ';
இட்லி -10

வெங்காயம் -2
பச்சை மிளகாய் -2
இஞ்சி -1 சின்ன துண்டு
கருவேப்பிலை
மிளகுத்தூள் -1டீ ஸ்பூன்
உப்பு --சிறிதளவு [ஏற்கனவே இட்லியில் உப்பு இருக்கும் ]
தாளிக்க ;
எண்ணெய் .மிளகாய் ,கடுகு, உளுத்தம் பருப்பு , சீரகம் ,
செய்முறை ;
முதலில் இட்லியை நன்றாக உதிர்த்து எடுத்து வைத்து கொள்ளவும் .
ஒரு கடாயில் எண்ணெய் போட்டு மிளகாய் ,கடுகு, உளுத்தம் பருப்பு , சீரகம் ,கருவேப்பிலை சேர்த்து தாளித்து பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியவுடன் உதிர்த்த இட்லி சேர்த்து நன்றாக கிளறவும்,அடுப்பை குறைத்து வைத்துக்கொள்ளவும் .சிறிதுநேரத்தில்.சூடாகிவிடும்.மிளகுத்தூள்சேர்த்து கிளறி இறக்கவும்.10 நிமிடத்தில் இட்லி உப்புமா தயார் .
பின்குறிப்பு ;
காலையில் செய்ய வேண்டும் என்றால் இரவே இட்லி சுட்டு பிரிட்ஜ்ல வைத்து இட்லியை உதிர்த்தால்தான் உதிர் உதிராக வரும்,இல்லையென்றால் பிசுபிசுப்பாக இருக்கும். மீந்து போன இட்லியிலயும் இதே போல் உப்புமா செய்யலாம் .இப்படி உப்புமா செய்து பாருங்கள் மிக்வும்ருசியாக இருக்கும் .அவசரமாக செய்ய ஏற்ற டிபன் ,,



No comments:
Post a Comment