Tuesday, 18 December 2018

BEANS PORIYAL- பீன்ஸ் பொரியல்

                                பீன்ஸ் பொரியல் 

                                          
பீன்ஸ் ,பாசி பருப்பு [ஊற வைத்தது ]-1டேபிள் ஸ்பூன் ,தேங்காய் துருவல் ,உப்பு ,கறிவேப்பிலை ,
தாளிக்க ;
எண்ணெய் ,கடுகு ,உளுத்தம்பருப்பு ,மிளகாய் ,பெருங்காயபொடி ,சீரகம் 

செய் முறை ;;
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுத்தம்பருப்பு ,மிளகாய் ,பெருங்காயபொடி ,சீரகம் சேர்த்து தாளித்து ,பிறகு  பீன்ஸ் ,,கறிவேப்பிலை ,பாசி பருப்பு [ஊற வைத்தது ,உப்பு சேர்த்து நன்றாக வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து கிளறி மூடி வைத்து குறைவான தீயில் வேக விடவும் .வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.





Image result for border images free

IDLI UPMA இட்லி உப்புமா







                                 இட்லி உப்புமா    






தேவையான பொருட்கள் ';
                                           இட்லி -10









வெங்காயம் -2
பச்சை மிளகாய் -2
இஞ்சி -1 சின்ன துண்டு 
கருவேப்பிலை 
மிளகுத்தூள் -1டீ ஸ்பூன் 
உப்பு --சிறிதளவு [ஏற்கனவே இட்லியில் உப்பு இருக்கும் ]


தாளிக்க ;
எண்ணெய்  .மிளகாய்  ,கடுகு, உளுத்தம் பருப்பு , சீரகம் ,



செய்முறை ;
          முதலில்  இட்லியை நன்றாக உதிர்த்து எடுத்து வைத்து கொள்ளவும் .
  ஒரு கடாயில் எண்ணெய்  போட்டு மிளகாய்  ,கடுகு, உளுத்தம் பருப்பு , சீரகம் ,கருவேப்பிலை சேர்த்து தாளித்து பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியவுடன் உதிர்த்த இட்லி சேர்த்து நன்றாக கிளறவும்,அடுப்பை குறைத்து வைத்துக்கொள்ளவும் .சிறிதுநேரத்தில்.சூடாகிவிடும்.மிளகுத்தூள்சேர்த்து கிளறி இறக்கவும்.10 நிமிடத்தில்    இட்லி உப்புமா தயார் .




பின்குறிப்பு ;
காலையில் செய்ய வேண்டும் என்றால் இரவே இட்லி  சுட்டு  பிரிட்ஜ்ல வைத்து  இட்லியை உதிர்த்தால்தான்  உதிர் உதிராக வரும்,இல்லையென்றால் பிசுபிசுப்பாக  இருக்கும்.  மீந்து போன இட்லியிலயும் இதே போல் உப்புமா செய்யலாம் .இப்படி உப்புமா செய்து பாருங்கள்  மிக்வும்ருசியாக இருக்கும் .அவசரமாக செய்ய ஏற்ற டிபன் ,,






Image result for under border images free















                                                

Friday, 14 December 2018

டிபன் சாம்பார் பொடிக்கும் சாம்பார் மிளகாய்த்தூளுக்கும் உள்ள வேறுபாடு

டிபன் சாம்பார் பொடிக்கும்,\  சாம்பார் மிளகாய்த்த்தூளுக்கும் உள்ள வேறுபாடு 




டிபன் சாம்பார் பொடியில் மிளகும்,, ,துவரம் பருப்பும் கிடையாது .


டிபன் சாம்பாரில் புளி ஒரு சிறிய துண்டு அப்படியே  போட்டால் போதும் .
புளி கரைசல் தேவையில்லை .


டிபன் சாம்பாருக்கு தக்காளி தான் அதிகம் போடணும்.


டிபன் சாம்பாரில் கடைசியில் தான் சாம்பார் பொடி போடணும் .சாம்பார் பொடி ப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி  விட வேண்டும் 

தஞ்சாவூர் டிபன் சாம்பார் [TANJORE TIFFIN SAMBAR]

           தஞ்சாவூர் டிபன்   சாம்பார் 

தேவையான  பொருட்கள் ;
துவரம் பருப்பு --1கப் 
[TOOR DAL]
பாசி  பருப்பு [அ ]சிறு பருப்பு --2ஸ்பூன் 
[MOONG  DAL]
தக்காளி -6 பெரியது 
பச்சை மிளகாய் --10  
சின்ன வெங்காயம்--1கப் 
முருங்கைக்காய் -5துண்டுகள் 
கத்திரிக்காய் --1கப் நறுக்கியது 
உருளை கிழங்கு --1
மாங்காய் --1 துண்டு 
புளி --1கொட்டை அளவு 
கருவேப்பிலை -1கொத்து 
பச்சை கொத்தமல்லி
உப்பு --தேவையான அளவு 

செய்முறை 









Image result for pachai kothamalli


  ஒரு குக்கரில்  சிறிது எண்ணெய் விட்டு அதில் பொடியாக  நறுக்கிய  கத்திரிக்காய் ,உருளை கிழங்கு ,தக்காளி ',,,முருங்கைக்காய் துண்டுகள் ,துவரம் பருப்பு ,,பாசி பருப்பு ,புளி ,மாங்காய் துண்டு ,மஞ்சள் தூள் ,பெருங்காயம் எல்லாம் போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் அடுப்பை  நிறுத்தி விடவும் .பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வர மிளகாய் ,பெருங்காயம்,கடுகு உளுத்தம் பருப்பு ,போட்டு தாளித்த பிறகு சின்ன வெங்காயம்,கீறிய பச்சை மிளகாய் ,கருவேப்பிலை எல்லாம் போட்டு வதக்கவும்.பிறகு குக்கரில் இருக்கும் பருப்பை நன்றாக மசித்து கொள்ளவும் ,அதனோடு வதக்கிய வெங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து ,பிறகு உப்பு போட்டு குக்கரில் மூடி போட்டு 10  நிமிடம் கொத்திக்கவைக்கவும் ,குக்கரில் வெயிட் போடவேண்டாம் .நன்றாக கொதித்தவுடன் டிபன் சாம்பார் பொடியை சிறிது தண்ணீரில் கரைத்து சாம்பாரில் போட்டு ஒரு கொதி விட்டு இறக்கவும் ,கடைசியாக பச்சை கொத்தமல்லி சேர்க்கவும்.டிபன்  சாம்பார்   தயார் ,இந்த சாம்பார் இட்லி,தோசை ,பொங்கல் அனைத்துக்கும் தொட்டுக்கொள்ள   மிகவும் ருசியாகவும்,மணத்துடனும் இருக்கும் 

Image result for border designs


SAMBAR POWDER

   சாம்பார் மிளகாய்த்த்தூள்  [SAMBAR POWDER]                                               




தேவையான  பொருட்கள் ;

விரலி மஞ்சள் --2
[TURMERIC]
மிளகாய் -1/4கி 
[RED  CHILLI]

கொத்தமல்லி --1கப் 
[CORIANDER SEEDS\
துவரம் பருப்பு --1/4கப்
[TOOR  DAL] 


கடலை பருப்பு -1/4கப் 
[GRAM DAL]

உளுத்தம் பருப்பு --2 டேபிள் ஸ்பூன் 
[URADDAL[OR]BLACKGRAM]



மிளகு --3டேபிள் ஸ்பூன் 

[BLACK PEPPER]




சீரகம் --1/4கப் 
[CUMIN SEEDS]




பச்சரிசி -1/4கப் 
[RAW RICE]

வெந்தயம் --4 டேபிள் ஸ்பூன் 
[FENUGREEK]



கருவேப்பிலை --1கைப்பிடி  அளவு 
[CURRY LEAVES]


கல் உப்பு -2டேபிள்  ஸ்பூன் 
[CRYSTAL  SALT]

நல்லெண்ணெய் ----2டேபிள் ஸ்பூன் [SEASAME OIL]




கட்டி பெருங்காயம் ==2 PEACE    [ASAFOETIDA]


செய்முறை  ;    ஒரு     கடாயில்  எண்ணெய் போட்டு முதலில்      மிளகாய் ,கல் உப்பு சேர்த்து கருகாமல் வறுத்து கொள்ளவும் .பிறகு கொத்தமல்லி    யை      வறுத்து எடுத்து க்கொள்ளவும் ...அதன் பின்   தனித்தனியாக எல்லா பொருட்களையும்  வறுத்து கொள்ளவும்  .பெருங்காயம் ,விரலி மஞ்சள் இரண்டையும் எண்ணையில் பொரித்து க்கொள்ளவும்,வறுத்த பொருட்களை  சூடு லேசாக ஆறியவுடன் மிக்சியில் நைசாக  அரைக்கவும்... . இல்லையென்றால் உடனே டப்பாவில் போட்டு மில்லில் கொடுத்து அரைக்கவும்,

பின்குறிப்பு ;;,   [கல் உப்பு சேர்த்து  வறுத்து  அரைப்பதால் நீண்ட நாள் க்கெட்டு போகாது   வறுத்து வெளியிலே வைத்தால் பொருட்கள் நமத்து  போய் விடும். ]   .                                                                                                   




Image result for border designs



Thursday, 13 December 2018

ரசப்பொடி [RASAM POWDER]

                                                   ரசப்பொடி [RASAM    POWDER]


தேவையான பொருட்கள் ;


மிளகாய்---5  [RED  CHILLI]
 கொத்தமல்லி ---1/4  கப்[CORIANDER SEEDS]
 துவரம்பருப்பு [TOOR  DAL]----2   மேசை கரண்டி [TABLESPOON]
மிளகு[BLACK  PEPPER ]----2 மேசைகரண்டி [TABLESPOON]

சீரகம்CUMIN SEEDS] ----     2 மேசை கரண்டி [TABLESPOON]

                                     

விரலி மஞ்சள் -[TURMERIC]---1/2துண்டு [PIECE]







கருவேப்பிலை[ CURRY LEAVES]----1/4கப் [CUP]



கட்டி பெருங்காயம்-[ASAFOETIDA]-1துண்டு [PIECE]
கல் உப்பு[ CRYSTALSALT]----1ஸ்பூன் 



செய்முறை ';

                          அனைத்து பொருட்களையும் வெறும் கடாயில்  லேசாக பச்சை வாசனை போகும் வரை 
வறுத்து 
கொரகொரப்பாகபொடித்துக்கொள்ளவும் 
கொரகொரப்பாகபொடித்துக்கொள்ளவும் ..பொடியை டப்பாவில் போட்டு வாசனை போகாதவாறு நன்றாக மூடி வைக்கவும் ..



பின்குறிப்பு ; உங்களுக்கு  உடனே தேவையென்றால் வறுக்காமல் பச்சையாக போட்டு பொடித்து கொள்ளவும்  ,.
Image result for border designs


[ TANJORE TIFFIN SAMBAR PODI]] தஞ்சாவூர் டிபன் சாம்பார் பொடி

                                       தஞ்சாவூர்  டிபன்   சாம்பார் 



                                            தேவையான பொரூட்கள் ;
                                            விரலி  மஞ்சள் -1[TURMERIC]

                 மிளகாய் [ RED CHILLI]--25 


                     கொத்தமல்லி CORIANDER SEEDS]--3/4 கப் 

                           கடலை பருப்பு[GRAM DAL ]--1/2 கப் [CUP]

வெந்தயம்[FENUGREEK ] ---3 மேசை கரண்டி [TABLE SPOON]



                                        சீரகம் CUMIN SEEDS]---1/4 கப் [CUP]

                                                           
                                        பச்சரிசி [RAW RICE]---1/4கப் 



                                     கட்டி பெருங்காயம் ASAFOETIDA]--1துண்டு [PIECE]

                            கருவேப்பிலைCURRY LEAVES] ---1 கைப்பிடி[HAND FULL] 


                               கல்  உப்பு CRYSTAL SALT]---1ஸ்பூன் 


                               நல்லெண்ணெய் SEASAME OIL]-2மேசை  கரண்டி 



செய்முறை ;
  *      ஒரு  கடாயில்   சிறிது நல்லெண்ணெய்  இட்டு விரலி மஞ்சள் .கட்டி 
          பெருங்காயம் , போட்டு  பொரித்து  எடுத்து வைத்து கொள்ளவும் .
 *        பிறகு  வரமிளகாய் ,கல் உப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும்
 *        பிறகு வர கொத்தமல்லி போட்டு  வறுத்து கொள்ளவும்..
 *        பிறகு ஒன்றன்  பின் ஒன்றாக  போட்டு  வறுத்து  கொள்ளவும் .
 *       ஆறியவுடன்  மிக்சியில்   போட்டு கொரகொரப்பாக [coarse]
          அரைக்கவும் ...


பின்குறிப்பு ; 

*  பொடிக்கு தேவையான  பொருட்கள்  அனைத்தையும் 
  பொன்னிறமாக  வறுக்க வேண்டும்.கல் உப்பு  சேர்த்து   வறுத்து அரைப்பதால்  பொடி  கெட்டு  போகாது.  பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி     வைக்கவும்           ..

     



Image result for border designs