மோர் குழம்பு [buttermilk kuzhambu]
தேவையான பொருள்கள் ;
வேகவைக்க
மஞ்சள் தூள் -1/4ஸ்பூன்
தக்காளி[அல்லது ]புளி [ஒரு கொட்டை அளவு ]
பூசணிகீத்து-[10துண்டுகள் ]
உப்பு -தேவையானஅளவு
ஊறவைத்து அரைக்க தேவையான பொருள்கள் ;
துவரம்பருப்பு -2டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு -2டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி -1 1/2டேபிள் ஸ்பூன
சீரகம் -1டேபிள் ஸ்பூன்
சின்னவெங்காயம் -2
இஞ்சி -1துண்டு
பச்சைமிளகாய்-5
தேங்காய் துருவல் -5டேபிள் ஸ்பூன் தனியாக அரைக்கவும]
தயிர் -300கிராம் [1 1/2 கப் ][சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடிக்கவும் ]
தாளிக்க ;
சமையல் எண்ணெய்- தேவையான அளவு
பெருங்காயத்தூள் -1/4ஸ்பூன்
வர மிளகாய் -2
கடுகு -1/2ஸ்பூன்
கருவேப்பிலை, பச்சை கொத்தமல்லி
செய்முறை
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்கள் ,,பச்சை மிளகாய் கீறியது -1,தக்காளி துண்டுகள் ,மஞ்சள்த்தூள் ,உப்பு சிறிதளவு ,தண்ணீர் சிறிதளவு ,சேர்த்து வேகவைக்கவும் .பிறகு ஊறவைத்து அரைத்த விழுதை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி அடி பிடிக்காமல் கொதிக்க விடவும் .பிறகு சின்ன வெங்காயம் ,இஞ்சி தட்டி போட்டு ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி வநதவுடன் தண்ணீர் சேர்த்து அடித்த தயிரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி [நுரைத்து வரும் ]வந்தவுடன் இறக்கி வைத்துவிட்டு ,பிறகு கடுகு.வரமிளகாய் ,பெருங்காயத்தூள் ,கருவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் போடவும் .நறுக்கிய கொத்தமல்லியை கடைசியாக சேர்க்கவும்






































