Friday, 13 September 2013

Fenugreek sprouts koottu[ முளைக்கட்டிய வெந்தய பொறிச்ச கூட்டு]

                     முளைக்கட்டிய   வெந்தய பொறிச்ச கூட்டு

 தேவையான பொருள்கள் ;
  முளை க்கட்டிய வெந்தயம்-ஒருகை



பாசி பருப்பு-ஒருகை
தேங்காய்துருவல் -2ஸ்பூன்
தககாளி-1
மஞ்சள்   தூள் =1/4ஸ்பூன்
 மிளகாய்  தூள் -1/2ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
 தாளிக்க  ;
    சமையல் எண்ணெய் -1ஸ்பூன்
    கடுகு -1/2ஸ்பூன்
   உளுத்தம்பருப்பு-1/2ஸ்பூன்
   சீரகம்  -1ஸ்பூன்
  சின்னவெங்காயம் -4
 பச்சை மிளகாய் -1
 கறிவேப்பிலை
 கூட்டு செய்முறை ;
ஒரு கடாயில் பாசிபருப்பு ,மஞ்சள்தூள் .,தக்காளி சேர்த்து வேகவைக்கவும் .
                               பிறகு முளைக்கட்ட்டிய வெந்தயத்தை சேர்க்கவும்
                                     பிறகு மிளகாய்த்தூள்,.உப்பு சேர்க்கவும்
 பிறகு தேங்காய் ,சீரகம் ,ஒரு சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்

 பிறகு வெந்தவுடன் தேங்காய் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்
பிறகு கடுகு, .உளுத்தம்பருப்பு ,.சீரகம் ,பச்சை மிளகாய் ,வெங்காயம் ,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து போடவும் .வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்து போடவும் .
இதில் தூது உருண்டை சேர்த்தும் செய்யலாம்



ஊற வைத்த கடலை பருப்பை கொரகொர ப்பாக அரைத்து கொள்ளவும் .பிறகு மிளகாய்த்தூள் .கறிவேப்பிலை .உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் அரை வேக்காடாக பொரித்து தேங்காய் சேர்ப்பதற்கு முன்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும் .
                             முளை க்கட்டிய வெந்தய பொறிச்ச குழம்பு தயார் ,.

Image result for border designs






No comments:

Post a Comment