Saturday, 14 September 2013

Garlic kuzhambu[ பூண்டு குழம்பு ]

                                             பூண்டு குழம்பு [அ ]வத்தல் குழம்பு 

                                                  
தேவையான பொருள்கள் ';

பூண்டு -15  பல் 
சின்ன வெங்காயம் -5
 கறிவேப்பிலை  
புளி - 1 எழுமிச்சம்பழ அளவு
சாம்பார்மிளகாய்தூள்  -2 ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
 மணத்தக்காளி வத்தல் -2 ஸ்பூன்
மாங்காய் பருப்பு

                                                             

                                
                                  தாளிக்க ;                     
                      கடுகு -1/2ஸ்பூன்    
                      உளுத்தம்பருப்பு -1/2 ஸ்பூன்
                      வெந்தயம் -1 ஸ்பூன்
                      சீரகம் -1 ஸ்பூன்
                      துவரம்பருப்பு -1 ஸ்பூன்
                      பெருங்காயம் -1/4 ஸ்பூன்
                      நலெண்ணெய் -6 ஸ்பூன்









செய்முறை ;
                  ஒருகடாயில் நலெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு வெடித்தவுடன் உளுத்தம்பருப்பு,வெந்தயம் ,சீரகம் ,துவரம்பருப்பு ,பெருங்காயம் இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு  பொரிஞ்சவுடன் வெங்காயம் ,பூண்டு ,கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கியவுடன் சாம்பார் மிளகாய்தூள் ,மஞ்சள்தூள்  போட்டு வதக்கியவுடனே புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கலக்கிக் கொதிக்க விடவும் குழம்பு நன்றாக கொதித்து சுண்டியவுடன் எண்ணெய் மேலே வந்துவிடும் .பூண்டு குழம்பு தயார் .



பின்குறிப்பு ;பூண்டு குழம்புடன் சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி ,               ,கத்திரி ,மாங்காய் வத்தல் ,மாங்காய்  பருப்பு இதில் எதாவது ஒன்று இருந்தாலும் வெங்காயம் ,பூண்டு வதக்கியவுடன் போட்டு வதக்கி சேர்த்து வைத்தால் வத்தல் குழம்பு தயார் .


No comments:

Post a Comment