-I
கடப்பாசட்னி

தேவையான பொருள்கள் ;
வர மிளகாய் -4
தனியா-2ஸ்பூன்
கடலை பருப்பு -2ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-2ஸ்பூன்
பெருங்காயத்தூள் -கொஞ்சம்
பச்சைமிளகாய் -1
புளி -1கொட்டை
இஞ்சி -1துண்டு
தக்காளி -1
சின்னவெங்காயம் -4
வெங்காயம் -1/2
தேங்காய் -1
பச்சை கொத்தமல்லி -கொஞ்சம்
கருவேப்பிலை -கொஞ்சம்
புதினா -கொஞ்சம்
சமையல் எண்ணெய் -3ஸ்பூன்
நலெண்ணெய் -3ஸ்பூன்
உப்பு
செய்முறை;ஒரு கடாயில் சமையல் எண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு மிளகாய் ,உப்பு ,புளி ,பெருங்காயத்தூள் ,தனியா [வர கொத்தமல்லி ]இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும் .பிறகு கொஞ்சம் எண்ணெய் விட்டு கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு ஒன்றாக போட்டு வறுத்து கொள்ளளவும் .பிறகு கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயம்,தக்காளிஇஞ்சி ,பச்சை மிளகாய் ,புதினா ,கருவேப்பிலை போட்டு வதக்கி கொள்ளவும் .பிறகு தேங்காயை என்னை விடாமல் வறுத்து கொள்ளவும் .பிறகு மிக்சி ஜாரில் பருப்பு தவிர மற்ற அனைத்து பொருள்களையும் ,பச்சை கொத்தமல்லியும் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும் .பிறகு பருப்புகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும் .பிறகு கடாயில் நல்லெண்ணெய் விட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.கடப்பாசட்னி ரெடி .இது சப்பாத்தி ,இட்லி ,தோசை இவை அனைத்திற்கும் தொட்டு கொள்ள சுவையாக இருக்கும் .


No comments:
Post a Comment