Wednesday, 8 June 2011

பச்சை மிளகாய் சட்னி [green chilli chutney]

                                         பச்சை மிளகாய் சட்னி 

 





தேவையான பொருள்கள் ;
                                                   சின்ன வெங்காயம் -6
                                                     பச்சை மிளகாய்-10
                                                      உப்பு
                                                     புளி-தேவயான அளவு





                                                    
செய் முறை ;
மிக்சி கப்பில்     முதலில் பச்சை மிளகாய் ,புளி,உப்பு சேர்த்து  நன்றாக அரைக்கவும் .பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து  கொரகொரப்பாக அரைக்கவும்.இது இட்லி ,தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும் .இந்த சட்னியில் நலெண்ணெய் ஊற்றி தொட்டு கொள்ளவேண்டும் .




VEG PARATHA

வெஜ் பராத்தா



தேவையான பொருள்கள் ;
கோதுமை மாவு - 2கப் 
கோஸ், காரட், உருளை கிழங்கு,குட  மிளகாய், வெங்காயம் , துருவியது -
2கப்
 பச்சை மிளகாய் -1
மிளகாய்த்தூள் -1
எண்ணெய்-4ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தண்ணீர்   தேவையான அளவு 
செய்முறை ;
                   கடாயில் எண்ணெய் ஊற்றி  வெங்காயம்,பச்சை மிளகாய்  போட்டு வதக்கி வதங்கியதும் துருவிய காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் .பிறகு ,மிளகாய்த்தூள் ,உப்பு சேர்த்து வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து கிளறி ஒரு இரண்டு நிமிடம் மூடி வைக்கவும் வெந்ததும் கொத்தமல்லி  சேர்த்து 
கிளறினால் வெஜ் மசாலா ரெடி .
பிசைந்த கோதுமை மாவில் சப்பாத்தி போட்டு  அதன் நடுவில் மசாலாவை வைக்கவும்

சப்பாத்தியை நான்கு பக்கமும் [   fold ]   மடக்கவும் .பிறகு  சப்பாத்தியை  தேய்க்கவும்
பிறகு தவாவில் போட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும் .வெஜ் பரத்தா ரெடி , தொட்டு கொள்ள எதுவும் தேவை இல்லை .வேண்டுமானால் தயிரில் வெங்காயம் சேர்த்து தொட்டு கொள்ளலாம் .சுவையாக இருக்கும் இதில் எந்த காய் வைத்தும் மசாலா செய்யலாம்